பக்கம்:கனிச்சாறு 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  99


எடுத்த நெடுமா
மலையில் எழுந்தே எழில்மலர் மேல்
படுத்த மணம் புணர்ந்
தின்சுனைத் தண்ணீர் பயின்றுடலங்
கடுத்த நிலைதவிர்
தென்றலே! பாரதி தாசனிசை
மடுத்த செவிக்குள்
அவன்புகழ் பாடி மலர்த்துவையே! 5

மன்னும் பெரும்பெயர்ப்
பாரதிதாசன் மணித்தமிழைத்
தின்னுங் கிளியே!
தனித்தேன் தினைமா தினக்கொடுப்பேன்;
மின்னும் படியுயிர்
மீளும் படியவன் மேம்பெயரை
இன்னும் ஒருமுறை
சொல்லுவை யோசெவி இன்புறவே! 6

இழைத்த கொடுமையொன்
றில்லா திருக்க எனைச்சுடுவாய்,
மழைத்த முகில்வந்
தெழில்மறைக் காத மணிநிலவே!
தழைத்த பெரும் புகழ்ப்
பாரதிதாசன் தனிப்புலமை
குழைத்த தமிழ்போல்
குளிர்பொழி வாயோ குலமகட்கே? 7

ஆர்த்த கழகத்
தருந்தமிழ் மீதே அழிபகைவர்
போர்த்த பழியிருள்
நீக்க வெழுந்த பரிதியெனும்
கூர்த்த மதிதிகழ்
பாரதி தாசன் கொழுந்தமிழ் போல்
சீர்த்தி நினக்கிலை
யே, கடல் சீர்த்தெழு செங்கதிரே! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/144&oldid=1446199" இலிருந்து மீள்விக்கப்பட்டது