பக்கம்:கனிச்சாறு 7.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


99

தமிழமல்லன் முயற்சி வெல்க!


“என்மொழி இனம்நா டென்றும்
ஏற்றமுற் றுய்ய வேண்டும்;
பன்மொழிக் கலப்பில் லாமல்
பைந்தமிழ் பொலிதல் வேண்டும்;
புன்மொழி தவிர்த்தல் வேண்டும்”
எனுங்கொள்கை போற்றி வாழும்
தென்மொழித் தமிழ மல்லன்
தீந்தமிழ்க் கமைந்த தொண்டர்!

தொண்டுசெய் உணர்வால், நாளும்
தூய்தமிழ் வளர்க்க வேண்டி
உண்டுறங் குகின்ற நேரம்
ஒழியமற் றெந்நே ரத்தும்,
மண்டுநல் அன்பர் கூட்டம்
மாணவர் கூட்டத் தெல்லாம்
வண்டெனச் சுற்றிப் பண்டை
வரலாறு புதுக்கும் வல்லார்!

ஏட்டினில் உரையில் வாழ்வில்
எங்கணுந் தமிழே ஆளும்
நாட்டினைக் காணல் வேண்டி
நம்முடைத் தமிழ மல்லன்
பாட்டினில் புரட்சி செய்த
பைந்தமிழ்ச் செழும் ‘பா வேந்தர்
ஊட்டிய தமிழு ணர்’
வென்
றொருநூலை உவந்து செய்தார்!

தூயநல் நெஞ்சம்! ஆங்கே
தூய்தமிழ் உணர்வெ ழுச்சி!
ஏயநல் லுணர்வில் தோய்ந்தே
எழுந்தநற் கருத்தென் றெல்லாம்
ஆயநல் லுருவாய்ப் போந்த
அருந்தமிழ்ச் சுவடி இந்நூல்!
தாயருந் தமிழ்க்கே வாழுந்
தமிழமல்லன் முயற்சி வெல்க!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/181&oldid=1446970" இலிருந்து மீள்விக்கப்பட்டது