பக்கம்:கனிச்சாறு 7.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

எத்தனைச் செல்வர் இழிந்து போயினர்!
எத்தனை உளங்கள் இருட்குழி ஆயின!
அத்தகைத் தாழ்ச்சிகள் அணுவும்அணு காது
மெத்தகு மேன்மையால் மேன்மேலும் சிறந்து
இம்மூ வுளங்கள் இருக்கும் சீர்மையால்,
தென்மூ வேந்தரின் திருநிலம் போலப் 40
பல்லடம் எனும்ஊர் பரவுசீர் ஊராய்க்,
கல்லும் கரம்பும் கனலெறி காற்றும்
நிறைந்திருந் தாலும் நெஞ்சினுள் நிற்கும்
மறைந்திலாப் பெயராய் மண்டுபுகழ் எய்தி
அன்பின் விளைநிலம் ஆகி
இன்பநல் ஊரென எம்மொடு விளங்குமே!

1984

 


116

பொன்னும் முத்தும்!



வெங்கா லூர்எனும் வியன்பெயர் சொன்னதும்
பொங்கும் அன்பின் பொற்செழி யன்எனும்
குளிர்ந்த முகமும், குறைவிலா அன்பின்
தளிர்நகை நெடுஞ்சேர லாதன் என்னும்
முத்துவின் முகமும், முழுநில வுகளாய்,
ஒத்தவா றென்றன் உள்ளத்து வானில்
நீந்தி ஒளிதரும்! நினைவிலும் துணைவரும்!
காந்தியென் உள்ளக் கருத்தினை வளர்க்கும்!
அற்றைநாள் தொடங்கி இற்றைநாள் வரையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/199&oldid=1446999" இலிருந்து மீள்விக்கப்பட்டது