பக்கம்:கனிச்சாறு 7.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


138

பொங்கலாமோ...?


உள்ளமோ ஓட்டைப் பானை,
உணர்வெலாம் அணைந்த கொள்ளி!
கள்ளமும் கரவும்போட்டுக்
கயமையைக் கலந்து பொங்கி,
எள்ளலும் இழிவும் சேர்த்தே
இகழெனும் இலையிலிட்டுக்
குள்ளமும் குருடும்கூடிக்
குதித்திடல் ‘பொங்க’ லாமோ?

-1965



139

மரத் தமிழன்!


பார்ப்பான் ஒருவன்; பழிவடவன்
மற்றொருவன்;
போர்ப்பண் இசைத்துப் புறம்நிற்க,
இங்கு நீ
புத்தரிசி தெள்ளிப் புதுப்பால்
உலையேற்றிப்
புத்துருக்கு நெய்கலந்து, பொங்கியுண்பாய்
செந்தமிழா!
பொங்கல் நறுஞ்சுவையும், புத்துருக்கு
நெய்ச்சுவையும்
தங்குநின் வல்லடிமை தன்சுவைக்கே
ஈடாமோ?
ஏடா! தமிழனே! என்னிதுகாண்
நின்பெருமை
மாடாநீ? இல்லை; மரம்!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/225&oldid=1447067" இலிருந்து மீள்விக்கப்பட்டது