பக்கம்:கனிச்சாறு 7.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


160

முத்துப் பாண்டியன் - மலர்விழி.


எந்தமிழ்த்தாய் வீற்றிருக்கை ஏற்ற தமிழ்நெஞ்சம்
செந்தமிழ்ப்பா யாக்கின்ற சீர்வாயும் - வந்தவர்க்கே
ஈத்துவக்கும் பண்பும் எழில்முத்துப் பாண்டியனைக்
காத்துவக்கும் வாழ்வுக் கலம்!

நல்முத்துப் பாண்டியனும் நல்ல மலர்விழியும்
இல்ஒத்த நல்லறத்தை ஏற்றார் - கல்லொத்த
வல்லுறுதி நெஞ்சங்கள் வாழ்கவென் வாழ்த்தினர்
சொல்லுறுதிச் சான்றோர்கள் சூழ்ந்து.

பாவல னாம்முத்துப் பாண்டியனும் பாண்டியனை
ஆவலால் கைப்பிடித்த அல்லி மலர்விழியும்
மேவலுறும் இல்லறமும் மேம்பட்டு வாழ்ந்துயர்ந்து
காவலாய் நிற்கதமிழ் காத்து.

-1979
 

161

ஈரோடு பெரு.தமிழ்வேந்தன் - பூங்கொடி.


பீடுதமிழ் காக்கும் பெருதமிழ் வேந்தனொடு
கூடுகின்ற பூங்கொடியாள் கொட்பின்றி - நீடுகுறள்
இல்லறத்தின் இன்பம் இனிய பொருளின்பம்
நல்லறத்தின் துய்க்க நயந்து.

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/247&oldid=1447122" இலிருந்து மீள்விக்கப்பட்டது