பக்கம்:கனிச்சாறு 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


திரு.வி.க. வாழ்வில் பெரும்பங்கு கொண்டது
மொழித்தொண்டா, பொதுத்தொண்டா?


(தி.பி. 2004 நளி17 (2.12.73)இல் ஆண்டு திருவாரூர் திரு.வி.க சிலைதிறப்பு விழாவில், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழக முதலமைச்சர் மு. அருட்செல்வனார், குன்றக்குடியடிகளார், பாவோகி சுத்தானந்த பாரதியார் முதலியோர் முன்னிலையில் நடந்த பாப்பட்டி மன்றத்தில் நடுவராக வீற்றிருந்து பாடியது)

எந்தமிழை எந்தமிழ் நாட்டை அரசாளும்
செந்தமிழ்க் கலைஞ! செந்தமிழ் ஞாயிறீர்!
அடிகளீர்! புலவரீர்! அருமைத் தமிழகம்
விடிவுகொள் நாளில் விளங்கத் தோன்றிய
அன்புறு பெரியீர்! அன்பரீர்! தாயரீர்!
இன்புறு முணர்வால் பாமன் றேறும்
பாவலீர்! உங்கட்குப் பணிவுசால் வணக்கம்.

ஆவலால் பட்டிமன்ற ணைந்திருக் கின்றீர்!
செந்தமிழ்த் தாயின் சீரடி போற்ற
வந்திருக் கின்றீர் என்னினும் வழுவிலை!
திரு.வி.க. .வின் திருவுரு வாழ்த்த
மருவு காதலால் மண்டினீர் என்னினும்,
சான்றோர் சாதலை வாழ்தலாய் எண்ணும்
ஆன்றோர் வழியை அகலா நெஞ்சராய்
மீட்டும் புதுக்கிக் கொண்டீர் என்னினும்
காட்டுந் தவறோ கடுகள வில்லை!

எவ்வழி யாகவோ தமிழர் இழந்தவை
ஒவ்வொன் றாகப் பெறப்பெற உலகினில்
அவர்முன் னேற்றம்; அவர்மொழி, நாடு
துவளுதல் இன்றித் துலங்குதல் உறுதி!

அறிஞரைப் போற்றுதல் அறிவைப் போற்றலே!
அறிவைப் போற்றலே அனைவர்க்கும் கடமை!
கடமை தவறினால் காண்பது மடமையே!
மடமை சூழ்வதோ மாய்வதின் இலக்கணம்!
போற்றுதல் என்பது அன்பால் புரப்பது!
தூற்றுதல் என்பதோ துன்பால் தொடர்வது!
அன்பினால் ஒருவர் அறிவைப் புகழ்வதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/101&oldid=1448114" இலிருந்து மீள்விக்கப்பட்டது