பக்கம்:கனிச்சாறு 8.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


முக்காமல் முணகாமல் முகிழ்த்ததப்பா!
முறுவல்பா! புரட்சிப்பா! முழுதுந்தேன்பா!
செக்காடும் ஓசைவராச் செந்தமிழ்ப்பா!
சிறப்புப்பா! சுவையப்பா! சொல்வா யப்பா!

காராடும் குளிரிருக்கும்! கதிராடும்
கனப்பிருக்கும்! காற்றிருக்கும்! ஊற்றிருக்கும்!
சீராடும் குழந்தைக்குச் சிணுங்காத
சிரிப்பிருக்கும்! செழிப்பிருக்கும்! செழும்பூஞ்சோலை

நீராடும் கன்னிக்கு நினைவிருக்கும்
படிகாதல் நிகழ்விருக்கும்! அன்பிருக்கும்!
போராடும் வீரர்க்குப் புரட்சியெனும்
புத்துணர்வால் தோள்களெலாம் புடைக்கும் அன்றோ!

(வேறு)


தமிழ்க் குடும்பத் திட்டம்
தந்திருப்பார் அங்கே!
குமிழ்த் தெழுந்த இன்பம்
குவித்திருப்பார் பாட்டில்!
சிமிழ்த் துவிழி யாத
செந்தமிழ வீரர்!
தமிழ்ப் புரட்சித் திட்டம்
தந்திருப்பார் பாட்டில்!

ஆரியத்துக் கோழைக்
கடிமையுற்ற போதில்
வீரியத்தை நாமும்
விட்டுவிட்ட போதில்,
கூரியசொல் வாளால்
குத்திமறம் கீண்டி
நேரியபு ரட்சி
நிகழ்த்திவைத்த கோமான்!’

(வேறு)


பாவேந்தன் சொல்லெடுத்துத் தன்மானந் தனைக்குழைத்துப்
பாட்டென்று தாரா விட்டால்,
நாவேந்தும்மொழி யெல்லாம் சமற்கிருதம்! கதைகளெலாம்
இராமன்கதை பார தந்தாம்!
பூவேந்தும் கைகளிலே புழுக்கையினை அன்றோநாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/114&oldid=1448450" இலிருந்து மீள்விக்கப்பட்டது