பக்கம்:கனிச்சாறு 8.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 


“இருக்கும் நிலைமாற்றஒரு புரட்சிமனப் பான்மை

ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.”


அடுத்துப்
பெண்மை போற்றிய பெருமைப் பாவலர்
ஒண்மை பாரதி தாசப் பாவலர்!

‘பெண்களால் முன்னேறக் கூடும். நம்

வண்தமிழ் நாடும்எந் நாடும்’ - என்று

எடுத்த எடுப்பிலே முழக்கம் இடுவார்!
அடுத்த குரலிலே ஆணையே பிறக்கும்!

‘பெற்றநல் தந்தைதாய் மாரே நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!


அடுத்தொரு பாடல் அடியைக் கேட்பீர்!
துடித்த அவர் உள்ளக் குமுறலைத் தோய்ப்பார்!

‘ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை!
வாணிகம் செய்யலாம் பெண்கள் - நல்

வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!’


தமிழகம் தன்னைக் காத்திடச் சொல்லிக்
கமழ்நறும் பெண்மைக்குக் கடமையைத் தூண்டுவார்!

‘தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்!
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்!
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!’

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள் -
என்று


மெச்சும் பெண்மையின் மேன்மையைப் பாடியோர்
உச்சுக் குடுமிகள் காலத்தில் உண்டா?

‘கலியாணம் ஆகாத பெண்ணே! - உன்
கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்சில பேர்கள்!

நல்ல விலைபேசு வார்கள் உன்னை

நாளும் நலிந்து சுமந்துபெற் றோர்கள்;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/119&oldid=1448459" இலிருந்து மீள்விக்கப்பட்டது