பக்கம்:கனிச்சாறு 8.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையும் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி - இந்த

வஞ்சகத் தரகர்க்கு நீஅஞ்ச வேண்டாம்!’

- என்று கூறி,

‘கற்றவளே ஒன்று சொல்வேன் உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்’

என்று முடித்தவர்,

“...... .... ...... .... அவர்

ஞாயந் தராவிடில் விடுதலை மேற்கொள்’


- என்று துணிவையும் ஏந்திழைக் குரைப்பார்!
பெரிய உலகில் பெண்ணலம் பேசிய
அரிய பாவலன் பாரதி தாசன்!

அடுத்துப்,
பாவேந்தர் ஒரு பகுத்தறி வுணர்வினர்.
ஆவலால் இதனையும் அவர்வா யாலே
கேட்டு மகிழ்வோம்!

‘குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசங்கெட்டுப் போனது நமதுநன் னாடு!’

‘கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்!
உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமை முற்றும் படையைஏவி
அடையும் மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின், அந்த
உடை வெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்

கழுதைதான் முன்னேற்றுமோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/120&oldid=1448460" இலிருந்து மீள்விக்கப்பட்டது