பக்கம்:கனிச்சாறு 8.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


10. மது ஒழிப்பு

(தி.பி. 2006 விடை 22 (5.6.75)ஆம் நாள் அன்று நடைபெற்ற உரத்தநாடு
வட்ட மதுஒழிப்புச் செயற்பாட்டு மாநாட்டில் நடந்த பாட்டரங்கத்தில்
தலைமையேற்றுப் பாடியது)

முன்னுரை:

பேரன்பு மிக்க வாய்மைப்
பெரியோரே! அன்னை மாரே!
கூரம்புச் சொல்லால் பாக்கள்
குமிழ்த்திடும் பாவல் லோரே!
சேரன்பாண் டியன்சோ ழன்கள்
சேர்ந்திங்கே இருப்ப தைப்போல்
ஈரன்பால் வந்தீர் இங்கே!
எல்லார்க்கும் வணக்கம் சொல்வேன்!

கற்றோரும் வந்தீர்! நூலைக்
கல்லாரும் வந்தி ருப்பீர்!
கற்றோரும் குடிக்கின் றார்கள்!
கற்றோரே குடிக்கும் போது
மற்றோரா விலக்கு வார்கள்?
மதுவைத்தான் சொல்லு கின்றேன்!
மற்றொரு - குடியு முண்டு;
மதியினால் குடிக்கும் பாட்டாம்!

பெண்களும் இக்கா லத்தில்
பெருமையாய்க் குடிக்கின் றார்கள்!
பண்களே அவர்கள் என்றால்
பாடல்கள் ஆண்கள் ஆகும்!
பண்களும் பாட்டும் சேர்த்தே
பயிலுதல் வேண்டும் அன்றோ!
பெண்களும் அதனால் தானோ
என்னவோ, பிழைசெய் கின்றார்!

(வேறு)


மதுவிலக்கு வந்தபின்னே மாநாடா என்பீர்!
மதுவிலக்கு வந்தாலும் மதிவிலக்கு வேண்டும்!
எதுவிலக்கு நேர்ந்தாலும் சட்டத்தால் நேரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/122&oldid=1448465" இலிருந்து மீள்விக்கப்பட்டது