பக்கம்:கனிச்சாறு 8.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 115

இழிவான மதுக்குடிதான்! எண்ணிப்பா ருங்கள்!
செத்துவிடும் போதொருவன் எதையெண்ணிப் பார்ப்பான்?
சீரழிந்த பின்னொருவன் எதையெண்ணிச் செய்வான்?

கருத்தழிக்கும் கட்குடியை நாம்விட்டு விட்டால்,
கண்திறக்கும்; செவி திறக்கும்; மதிதிறக்கும்; அக்கால்
உருத்தெரியாப் போனதமிழ்ப் பெருமையெலாம் எண்ணி
வென்றே அழச்செய்யும்; அதன்பின்னர் நின்று
திருத்தமுறச் செய்திடுவோம் தமிழ்க்குடியை; மொழியை!
தீர்த்துவிட்ட பழம்பெருமை போராடி மீட்போம்!
பெருத்தவினை நமக்குண்டு! தெருத்தெருவாய் ஊராய்ப்
பேசிடுவோம்; எழுதிடுவோம்; செய்திடுவோம் வாரீர்!

நமைத்தீய்த்த சாதிகளை நாம்தீயில் தீய்ப்போம்!
நமைத்தாழ்த்த மதக்கீழ்மை நாம்தோண்டிப் புதைப்போம்!
இமைத்தாழ்த்தம் செய்தாலும் இனியழிந்து போவோம்!
எந்தமிழ்த் தந்தையரே! தாய்மாரே! இளைஞீர்!
எமைத்தாழ்த்தும் தீமைகளை இனிப்பொறுக் கோம்! நம்மை
எவரடிக்கும் கீழ்ப்படுத்தோம்! நாம்உரிமை பெற்றோம்!
உமைத்தாழ்ந்து வேண்டுகின்றேன்! ஒன்றுபட்டே உய்வோம்!
ஒழியுங்கள்! கட்குடியை! உழையுங்கள் நன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/129&oldid=1448474" இலிருந்து மீள்விக்கப்பட்டது