பக்கம்:கனிச்சாறு 8.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘கனியிடையில் ஏறிவரும் சுளையினையும் முற்றற்
கழையிடையில் ஊறிவரும் சாற்றினையும் வண்ணப்
பனிமலரில் ஏறிவரும் தேனினையும் காய்ச்சும்
பாகிடையில் ஏறிவரும் சுவையினையும் ஆங்கே
நனிஆக்கள் பொழிதருதீம் பாலினையும் தென்னை
நல்கியதோர் குளிர்மையிள நீரினையும் முற்றும்
இனியனஎன் பேன்எனினும் எந்தமிழை என்றன்

இன்னுயிர்என் பேன்கண்டீர்’ என்றான்பா வேந்தன்


மேலுமவன் செந்தமிழ்மேல் கொண்டிருந்த அன்பால்
மிழற்றுகின்ற செழும்பாடல் அவன்தமிழில் கேட்பீர்!

“அரும்பு தந்த வெண்ணகையே!
அணிதந்த செந்தமிழே, அன்பே!”

‘மடுத்துமகிழ் நறுந்தேனே,
வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே!’

‘கண்டுவந்த திருவிளக்கே,
களிப்பருளும் செந்தமிழே, அன்பே!’

‘உடலியக்கும் நல்லுயிரே,
உயிரியக்கும் நுண்கலையே
கடலியக்கும் சுவைப்பாட்டே,
கண்ணான செந்தமிழே, அன்பே!'

‘ஐயத்திற் கறிவொளியே,

ஆடல்தரும் செந்தமிழே, அன்பே’ - என்று


ஏலும்வகை நூறுமுறை அன்பன்பே என்றே
இன்னுயிரைப் பிழிந்தூற்றித் தமிழ்வடித்த தாரே?
நாலுவகை நூல்களையும் படித்திருப்போம்! 'தமிழே
நான்தும்பி பூக்காடு நீ' யென்ற தாரே?
பாலிடையில் துளிநஞ்சா? பாவேந்தன் பதைத்தான்!
பைந்தமிழில் மொழிக்கலப்பைச் சாடுவதைக் கேட்பீர்!

‘தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வட
மொழி சேர்த்தார் தவிர்தல் வேண்டும்!
தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள்
படக்கதைகள் எழுதல் வேண்டும்!’

‘முதல்நூலை அயலான், நஞ்சால்

முறித்ததும் காணுகின்றேன்'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/152&oldid=1448538" இலிருந்து மீள்விக்கப்பட்டது