பக்கம்:கனிச்சாறு 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  139

‘தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு’

கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு;
காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு;
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு;
நம்உரிமை தனைக் கடித்ததப் பாம்பு!'

‘தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக்
காப்பியம்நன் னூல் இயற்ற
நினைப்பாரேல் நம்புலவர், நிலவாவோ
ஆயிரநூல் தமிழகத்தே!'

‘அறிவிப்புப் பலகையெலாம் அருந்தமிழ்ச்சொல்
ஆக்குவதே அன்றி அச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற
சொல்லாக அமையுமாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்?
தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?’

‘தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்

தூய்தமிழ் பிதற்றும் என்வாய்!’


தமிழ்வளர்ச்சி பற்றியவன் சாற்றுகின்றான் கேளீர்!
தமிழல்லால் முன்னேற்றம் சிறிதுமில்லை என்பான்!

‘நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனும்
தமிழ்அல்லால் நம்முன்னேற்றம்
அமையாது; சிறிதுமிதில் ஐயமில்லை, ஐயமில்லை
அறிந்து கொண்டோம்'

'இன்பத் தமிழ் குன்றுமேல் - தமிழ்
நாடெங்கும் இருளாம்!’

‘மொழியென்றால் உயிரின் நரம்பு . நம்
முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு’

‘தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்
அறிவுயரும் அறமும் ஓங்கும்!
இமயமலை போலுயர்ந்த ஒருநாடும்

தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/153&oldid=1448540" இலிருந்து மீள்விக்கப்பட்டது