பக்கம்:கனிச்சாறு 8.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்!
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்
ஏன் ஏன் ஏன்?’

‘சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்தஓர் உயிர் நான்’


அவனுரைத்த சூள்தன்னை அவன்வாயால் கேளுங்கள்!
எவனுரைத்தான் இவ்வாறாய் எந்தமிழ்ப்பா வேந்தனல்லால்!

(வேறு)


“நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல்இன்றி அவர்நலம் எண்ணி

உழைத்திட நான் தவறேன்’

(வேறு)


சாவேந்தாப் புகழ்பெற்ற நல்லுணர்வுச் சான்றோன்,அப்
பாவேந்தன் குறிக்கோளைப் பாடுகின்றான் கேளுங்கள்!

(வேறு)


“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும், மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

செத்தொழியும் நாளெனக்குத் திருநாள் ஆகும்”

(வேறு)


இவ்வாறாய்ப்

புதுவைக் குயிலொலித்த ‘புரட்சிக் குரல்’ தன்னை
வெதுவெதுப் பூட்டும் 'விடுதலைக் குரல்' ஒலியை
‘பகுத்தறிவுக் குரலை’ப் பெண்ணுரி மைக்குரலை’த்
தொகுத்த ‘இனமானம் தோய்குரலை’ப் பாவலர்கள்
இங்கெடுத்துப் பாட இருக்கின்றார்! நீங்களெல்லாம்
பொங்கும் உணர்வோடும் பூரிக்கும் நெஞ்சோடும்
அமைந்திருந்து கேட்குமாறு ஆவலினால் வேண்டுகின்றேன்!
இமைதிறந்து கண்பார்த்(து) இருந்து!
முதன் முதலாய்,
தனிமானம் வேண்டாம்; தமிழர் இனியேனும்
இனமா னக்குரல் எழுப்புக என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/160&oldid=1448554" இலிருந்து மீள்விக்கப்பட்டது