பக்கம்:கனிச்சாறு 8.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


3. பகுத்தறிவுக் குரல்.
சாதியொழிப்புக் குரல்!

சாதியும் மதமும் சாய்க்கடைப் பழைமையும்
பாதியில் தமிழரின் பண்பைக் கெடுத்தன!
பாவேந்தர் அவற்றைப் பதைபதைப் போடு
சாவடி அடித்துச் சாடி யுரைப்பார்!

“வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்”

“இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்”

“இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழுகின்றார்!
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்?”

“சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டை உலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்”

“சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ்வளர்த்தல் மற் றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற

பாதி துலங்குவ தில்லை”


பகுத்தறிவுக் குரல்!

“பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்
பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி!”

“புனைசுருட்டுக் குப்பை அன்றோ - பழம்
புராண வழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டுவைக் காதே!
எடு துடைப்பத்தைஇப் போதே”

“பாழ்படும் பழமை சூழ்வது திறமா?

பகுத்தறி வால்நலம் வகுப்பது திறமா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/168&oldid=1448575" இலிருந்து மீள்விக்கப்பட்டது