பக்கம்:கனிச்சாறு 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 167


அடுத்து,

அரிமாப் பாண்டியன் அழகுத் தமிழில்
அரிமா முழக்கமாய் பாவேந்தர் உரைப்பதுபோல்
அவரின் இனஉணர்வு எடுத்துக் காட்டினார்.
இருந்து கேட்போம்! இனி,

அடுத்து,

பாவலர் தமிழியக்கன் பாடினார் பாவேந்தர்
நாவால் உதிர்த்த நாட்டுணர்வை கேட்டோம்!
இற்றைத் தமிழர்க்கு இன்றியமையா உணர்வது
அற்றைப் பெருமையை ஆக்குவது அவ்வுணர்வு!

அடுத்து,

பாவேந்தர் இயற்கை உணர்வினை எடுத்தே
ஆவலாய் இங்கே அருமைப் பாவலர்!
கலிய பெருமாள் களிப்பெழப் பாடினார்!
பொலிந்த வாணிதாசன் மருகர் வாழ்க!

முடிவுரை

பாவேந்தர் கருத்துநலன் பாப்புலவர் சொன்னார்!
பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டிருந்தோம் நாமும்!
பூவேந்தும் நறுந்தேனைச் சுவைத்திடும்தே னீக்கள்
போலன்றோ நாம்சுவைத்தோம்! புலவரெலாம் வாழ்க!
சாவேந்திச் சென்றதெனப் பாவேந்தைச் சொன்னார்!
சரியில்லை என்போம் நாம்! செந்தமிழ்த்தீம் புலவர்
நாவேந்தி வாழ்கின்றார் பாவேந்தர்! உண்மை!
நாடெல்லாம் வீடெல்லாம் அவர்வாழ்கின் றாரே!

1. தமிழுணர்வு:

செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்;! செந்தமிழ்க்கே வாழ்ந்தார்!
செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார்; செந்தமிழ்க்கே பேசிச்
செந்தமிழ்க்கே அவருழைத்தார்! செந்தமிழாய் நின்றார்!
செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!
செந்தமிழ்க்கே பாவேந்தால் செழும்பெருமை யன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/181&oldid=1448616" இலிருந்து மீள்விக்கப்பட்டது