பக்கம்:கனிச்சாறு 8.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 7


1.வாணிகர் என்னுந்தலைப்பில் பாடிய திரு. தமிழண்ணல் பாடற்கு அறிமுகம்

புத்துணர்வு வேட்பாளர்; புலிப்போலும் பாய்ந்துபகை வெல்லும் தொண்டர்! தொத்துணர்வால் பாடிநலம் ஊட்டவல்ல பாவலர்; செந் தமிழ அண்ணல் கத்துகடல் போல்முழங்கித் தமிழகத்து வாணிகரை ஒன்று கூட்டி முத்தமிழ்சேர் நல்லியக்கம் காணுதற்கு முனைந்திடுவார்; காண்போம் இங்கே!

2.அரசியலார் என்னுந்தலைப்பில் பாடிய திரு. நா.காமராசு பாடற்கு அறிமுகம்

செந்தமிழ் காக்கச் சிறைசென்ற வல்லரிமா! இந்திக்கு முன்னம் எரிபுயல்! இன்றே விடுதலை வேண்டுமெனில் வெற்புத்தோள் தூக்கிக் கொடுதலை என்றாலும் கூனாத் தமிழ்மறவன் நற்காம ராசன்! இங்கு நல்லர சாளுநர்க்குப் பொற்பா புனைவான் பொலிந்து!

3.செல்வர் என்னுந்தலைப்பில் பாடிய திரு.காளிமுத்து பாடற்கு அறிமுகம்

தனித்தமிழ்க்குப் பெருந்தொண்டர் தகுகாளி முத்தென்னும் தனிமுத் தென்பார். குனித்தமுது கெழும்வகையில் கூடியுள்ளார் கொளும்வகையில், கொம்புத் தேன்போல் இனித்ததமிழ்ப் பேச்சாளர்; எந்தமிழ்க்கே மூச்சாளர்; இனிமேல் இங்குப் பனித்தமிழில் தமிழியக்கம் பாடிடுவார் செல்வருடைப் பங்கு சொல்வார்!

4.மாணவர் என்னுந்தலைப்பில் பாடிய திரு. மு.இராமச்சந்திரன் பாடற்கு அறிமுகம்

ஈர்க்கின்ற மொழியாலும் இசைத்தமிழின் நயப்பாலும் இணைந்து நின்று

சேர்க்கின்ற மொழிநடையால் சொல்முறையால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/21&oldid=1447624" இலிருந்து மீள்விக்கப்பட்டது