பக்கம்:கனிச்சாறு 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 33

கதம் என்பது கடப் என்றும்
நெருப்பு என்பது நபிர் என்றும்
அராபி மொழியில் வழங்கிய ஆட்சியும்,

அப்பன், செவ்வை, அம்மை, மெத்தை,
ஊர், பழம், சாய், மாறு என்பன முறையே
ஆப், ஷாவாஹ் ஏம், மித் தாஹ்” என்றும்
ஆர், பெரி, ஷா, மூர் ஆகவும் திரிந்தே
அற்றை எபிரேயத் தின்தமிழ் ஆட்சியும்
அது- தெ;இரு- சுர்;தா-து; மனை-மென்;
செம்மை-சென்ப்;மாத்திரை-மெத்தர்;
நக்கு-லெக்கு;வாரி-மெர் என்றும்
பண்டை எகுபதில் பைந்தமிழ் ஆட்சியும்
தமிழின் தாய்மையைக் காட்டும் அன்றோ?

இன்னும்
ஆப்பிரிக்கா அடுத்த நாடுகள் அனைத்திலும்
மூப்பற வழங்கும் செமிதிக் இனமாம்
அரமியம், கல்தேயம், சீரியம், பெர்சியம்,
அசீரியம், சுமாரித்தம், பொனிசியம் என்னும்
மொழிகளும் அவற்றின் கிளைமொழி தாமும்

ஆசி யாவில் தென்பால் வடபால்,
பகுதியில் வழங்கும் துரானிய இனமெனும்
தைக்கம், மலாயம், காங்கையம், முண்டா,
பர்மியம், சிங்களம், துருக்கியம், சீனம்,
பின்னிய மொழிகளும் கிளைமொழி தாமும்

இக்கால இந்திய வடபால் வழங்கிடும்
ஒரியா, சிந்தி, வங்காளி, அசாமி,
பலுசியம், மராத்தி, பஞ்சாபி, கூர்க்கம்,
கோட்டு, கோண்டு, கூய், ராசு மகாலி,
மாலடா, காசுமீரி, நேபாலி
என்னும்
மொழிகளும் இவற்றின் கிளைமொழி தாமும்

தாய்த்தமிழ் பெற்ற சேய்மொழி என்ப,
ஆய்மதி மொழியியல் அறிஞர் தாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/47&oldid=1447662" இலிருந்து மீள்விக்கப்பட்டது