பக்கம்:கனிச்சாறு 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

முந்தூழ், பாதிரி, முடங்கல், காம்பு
ஆம்பல், வேழம், அரி, அமை, திகிரி
தூம்பு, வேய், தட்டை, துளை, வேல், வேரல்
கிளை, கழை, விண்டு, பணை, வரை, வெதிரி

என்பன மூங்கிலின் இன்றமிழ்ப் பெயர்கள்!
கன்னி மொழியில் காடு அறு நான்குசொல்!
மரங்களில் ஆண்பெண் மரபு தெரியுமா?
கருங்காலி முதலிய வன்மரம், ஆண்கள்.
தெங்கு, பனை, மூங்கில் வன்புல், பெண்கள்,
முருங்கை முதலிய அலிமரம் என்பர்,
அகக்காழ் உற்றன ஆண்; பெண் புறக்காழ்!
தொகவெளி றுற்றன எல்லாம் அலிமரம்!
எத்துணை மொழிவளம்! எத்துணை அறிவு!
எத்துணை மெய்யுணர் விருந்த தமிழ்மொழி!

இளமை:

வளமை உடைய தமிழ்கண் டீர்கள்
இளமை உடைய தமிழைக் காட்டுவேன்.
ஆயிரம் இரண்டொடு முந்நூறாண்டுகள்
வாயுரைக் கெளிதெனின் வரையறை நீண்டது.
தொல்காப் பியத்தின் தொன்மை அதுவென
பல்கால் ஆய்ந்த பாவாணர் உரைப்பார்.
அத்துணைப் பழமை வாய்ந்தஅந் நூலில்
வந்த சொற்களில் பலஇற வாதன.
‘விளிம்பு’ம் ‘தொகுதி’யும் ‘உடைமையும்’ போன்ற
இளமைச் சொற்கள் எண்ணி றந்தன.
‘தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும்வரி
முந்தைத் தமிழ்வரி! முதிரா இளமை
பொருந்திய சொற்கள் இன்றும் பொருந்துவ.
முதுமொழி விளக்கிய நூற்பா ஒன்று.
“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி”
- என்பது
நூற்பா வாகும்! இன்று நுதலினும்
வேறுபொருள் பெறுமோ? வேறொன்று காண்மின்,
“சூத்திரந் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/54&oldid=1447916" இலிருந்து மீள்விக்கப்பட்டது