பக்கம்:கனிச்சாறு 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


மேற்சுவடி யோடுதெரு மேலே - கூர்
வேலுக்கு நிகர்விழி மெல்லிசெல் வதைக்காண
வேண்டுமே இப் பெற்றவள் கண்ணாலே!
.................................................................
மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே, நீ
மங்கை எனும் பருவம் கொண்டு - காதல்
வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு - காட்டித்
‘தேவை இவன்' எனவே செப்பும்மொழி எனக்குத்

தேன்! கனி! தித்திக்குங்கற் கண்டு!”


கோடிக் கணக்கில் உவமைகள் கூறுதல்
வாடிக்கை அவர்க்கு! வரட்சியங் கில்லை!
அடுத்தது பாத்திறன் அத்திற மைக்கும்
எடுத்த புலவன் ‘பாரதி தாசனுக்’
கீடில்லை என்பேன்! எனைமறுப் பீரா?

“கண்ணுக் கொரு வண்ணப்புறா!
காதுக்கவள் கானக் குயில்
பெண்ணுக்கர சானவளை
வந்தால் வரச்சொல் - எனக்கே
பேச்சுப்படி ஆசைமுத்தம்

தந்தால் தரச்சொல்!”


சொல்லச் சொல்ல சுவைத்திடும் கட்டி
வெல்லச் சொற்கள்! துள்ளு நடை!

“ஓர்நிலவே அவள்தானோ கதிர்தானோ?
கொம்புத் தேனோ நடை

ஓவியமோ புள்ளி மானோ?”


சிந்துத் தேனிசை வந்திடும் பாக்கள்!

“கைப்பிடியில் கூட்டிவரக் கட்டளையிட் டாளெனவே
செப்புகின்றாய் வாழியவே வாழி! - நான்
ஒப்பவில்லை என்றுரைப்பாய் தோழி!’

“மந்தையின் மாடு திரும்பையிலே - அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தியிருந்தவள் வீடு சென்றாள் - அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!”

தொந்தி மறைந்திட வேட்டி கட்டி - அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக்கொடுத் திட்டான்டி அவன்

எட்டி ஒரே முத்தம் இட்டான்டி!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/72&oldid=1448033" இலிருந்து மீள்விக்கப்பட்டது