பக்கம்:கனிச்சாறு 8.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 71


என்றே குயிலைக் கூவச் செய்தவர்!

‘சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற

பாதி துலங்குவ தில்லை!’


சாதிமேல் அடித்த சம்மட்டி அடியிது!

‘இந்த உலகில் எண்ணிலா மதங்கள்!
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!

சாதிக்குச் சாவுமணி அடிக்க!’


சாதிக்கு அடித்த சாவு மணியிது!

‘அடக்குமுறை செய்திடல் முடியும் .- கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும்! - உணர்

வொடுக்குதல் எவ்வாறு முடியும்!’


அடக்கு முறைமேல் அடித்த அடியிது!
“தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை.’

தமிழ்த்தொண்டு செய்வோர்க்குத் தந்த துணிவிது!

‘சிம்புட் பறவையே சிறகை விரி,எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திற!விழி!
இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந் திரு.
குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக் கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்

தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை!’


தொய்ந்த தமிழனைத் தூக்கி நிறுத்தும்
வெய்யுரை! அழல்சேர் வீர வரிகள்!

‘உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு

நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/85&oldid=1448064" இலிருந்து மீள்விக்கப்பட்டது