பக்கம்:கனிச்சாறு 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம்
உணர்வாகி நண்ணி டாரோ?
‘இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சிமனப் பான்மை

ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்!’


என்று புரட்சிக் கெழுத்தா ளர்களே
நின்றிங் குதவுதல் வேண்டும் என்பார்!

இவைபோல் பாடல்கள் ஏராளம் உண்டு
அவையெலாம் கூறிட ஆகிடும் ஒருநாள்!
இறுதியாய் அவரின் புரட்சியுள்ளத்தை
உறுதியாய் விளக்கும் ஒரேஒரு பாட்டு!
நகைச்சுவைப் பாடல்! நன்றாய்க் கேளுங்கள்!

ஏசு நாதர் ஏன்வர வில்லை
என்னுந் தலைப்பில் எழுது கின்றார்:

‘தலை, காது, மூக்குக்,க ழுத்துக், கை, மார்பு, விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்,
தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமி ழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!
நிலைகண்ட பாதிரி, பின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடு நாக்கு
நிறைநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும் உண்டென
இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார்!
ஏசுநாதர் மட்டும் அங்குவர வில்லையே,

இனிய பாரத தேசமே!’


பத்தர்கள் மண்டையில் படீரென அடிக்கும்
முத்திப் பாடல் இதுவென முழங்கலாம்!
நகைச்சுவை யோடு நயமாய்ச் சொல்லி
வகையாய்ப் புரட்சியை மனத்தினில் விளைத்தார்.
புரட்சிப் பாவலர் பொதுமை உணர்வினை
இறுதியாய்க் கூறுவேன் இருந்து கேட்பீர்!

‘புதியதோர் உலகுசெய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/86&oldid=1448081" இலிருந்து மீள்விக்கப்பட்டது