பக்கம்:கனியமுது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

குருதி குடித்திட்ட கொல்புலியும்
பிறிதோர் சுவை தேடிப் பெற்றிடாதாம்
வெறி மிகுந்துமே மக்களைக் கொல்லுமாம்
காட்டு முறையது என்கின்றார் கற்றோர் !
நாட்டினிலும் உண்டு அது போலோர் வெறி
பொருள் தேடிப் பெற்றதும் போதுமென் றெண்ணாது
புதிது புதிதாகப் பொருள் தேடி அலைவது
வெறிதான் ! அடக்கிட இயலாது என்பர்.
எளிய வாழ்க்கையில் இன்பங் கண்டவன்
ஏளனம் செய்தவன் கிளப்பிய சூட்டினால்
பொருள் தேடிடப் புறப்பட்ட ஆர்வமும்
வெற்றி தந்தது; உடன் வெறியுங் கிளம்பிற்று.
வீடு மறந்தனன், வேல்விழியாள் நினைவும் மறந்தனன்
பெருங்காற் றசைத்திட ஆடும் மரமானான்
பெருநிதி! புதுமாளிகை! ஏற்றம் மிகவும்;
ஆடம்பரம் அவளை அலங்கரித்து நின்றது காண்
சுற்றிலும் பார்க்கின்றாள்! பளபளப்பு ! மினுமினுப்பு!

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள் அம்பு!

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/117&oldid=1380211" இலிருந்து மீள்விக்கப்பட்டது