பக்கம்:கனியமுது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடுகின்ற பொருளெல்லாம் சோற்றுக் கில்லாத்
தொழிலாளிப் பெருமூச்சாய்க் கொதிக்குங் கோடை
சுடுகின்ற பகற்கொடுமை தணிக்க எண்ணித்,
துணை வனுடன் கடற்கரைக்குச்சென்ற மர்ந்தேன்.
படுகின்ற துயர்குறையத் தென்றல் தீண்டப்-
பக்கத்தில் சேல்விழியாள் மெய்யுந் தீண்டக்-
கெடுகின்ற இடைவெளியை வாழ்த்திக் கொண்டே
கிறங்குமொரு காதலனின் நிலையைக் காட்டி...

"என்றப்பா உனக்கிந்த நிலைமை?" என்றேன்.
ஏனென்றால் அவன் இன்னும் எடுப்புச் சோறே!
"ஒன்றல்ல, இரண்டல்ல; திரும ணத்தால்
ஓயாத தொல்லையப்பா! எனக்கு வேண்டாம்!
இன்றுபோலத் தனியாளாய் என்றும் வாழ்வேன்!
எழுந்திரப்பா, நடந்திடலாம்!" என்றான் நண்பன்.
"நன்றல்ல பெண்ணின்றி வாழ்ந்திருத்தல்;

நான்சொல்வ தவ்வளவே!" எனஎ முந்தேன்.

9

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/20&oldid=1459281" இலிருந்து மீள்விக்கப்பட்டது