பக்கம்:கனியமுது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஓய்வுபெற்ற அதிகாரி உலக நாதர்
    உணவருந்தி, வெண்சுருட்டுப் புகைத்த வாறு,
சாய்வுநாற் காலியிலே சரிந்தி ருப்பார்.
    சரிகையிட்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலை
தேய்வுபெறா உரல்போன்ற இடையைச் சுற்றத்
    திரளாகத் தொங்கவிட்ட சாவிக் கொத்து
போய்வரவே கிண்கிண்எனும் ஒலியெ முப்பப்
போராடும் பேருடலாள் வேத வல்லி!


மூத்தமகன் தகப்பனப்போல் மெலிந்த மேனி,
    முற்றிவிட்ட இதயநோயால் தாக்கப் பட்டோன்!
பார்த்துவந்த மருத்துவரோ எச்சரித்தார்:
    படியேறிச் செல்லுவதும் தீமை என்றே!
ஆத்திரத்தால், மருமகளே அடக்கி யாளும்
ஆறாத திமிர்க்கருத்தால், வேத வல்லி,
காத்திருந்தாற் போற்கிடங்த ஏழைப் பெண்ணும்
கமலாவை அடிமையாக்கிக் கொண்டு வந்தாள்!

17

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/28&oldid=1383244" இலிருந்து மீள்விக்கப்பட்டது