பக்கம்:கனியமுது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


அலுவலகக் கலைமன்ற நாட கத்தில்
அடக்குமுறைக் கணவனானுக அவர்ந டிக்கக்--
கொலுவிருக்கும் பொம்மையென வாய்பே சாத
குணவதியாய் நான் நடிக்கும் காட்சி ஒன்றில்...
வலுவுள்ள தடியாலே அடித்துப் போடும்
மனமுருக்கும் ஒத்திகையை நடத்திப்பார்த்தோம்.
சிலுவையிலே வதைபட்ட ஏசு வோடு
சேர்ந்திருந்த யூதாசாம் துரோகி யைப்போல்



எங்களது கலம்விரும்பும் தோழி போல
என்றென்றும் பழகிவந்து தீமை செய்தாய்
செங்கமலம் ! உனைச்சொல்லிக் குற்ற மில்லை !
செந்தமிழின் பெயராலே வாழ்வை ஒட்டித்
தங்களையே வளர்த்துவரும் சிலபேர், இன்று
தமிழழிக்கும் பகைவரது கூலி யாளாய்ச்,
சிங்கமென மொழிகாக்கும் மறவர் தம்மைச்
சிறுமதியால் தாக்குகின்றா அவரும் வாழ்க!

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/69&oldid=1380313" இலிருந்து மீள்விக்கப்பட்டது