பக்கம்:கனியமுது.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அடக்கங்தான் அமரருக்குள் உய்க்கு மென்ற

அருங்குறளே நெறியாகக் கண்டார் போலும், தொடக்கமுதல் துணைவிக்குக் கீழ்ப்ப டிந்து

தொல்லைதரும் பிணக்கின்றி வாழ எண்ணி, முடக்குவாத நோய்தாக்கக் கொடுமைப் பட்டு

மூன்ருண்டு காலமாக வதையுங் தாயார் கிடக்கின்ற படுக்கைக்கு விடைகொ டுக்கக் கிஞ்சிற்றும் தமிழய்யா முனைய வில்லை!

கல்லூரி செல்கின்ற நேரம் போகக்

கடைவீதி சுற்றிடுவார் : கால்கள் கோவப் பல்வேறு திசைதிரிந்து, குறைந்த காசில்

பண்டங்கள் வாங்கிடுவார் ! கஞ்சன் என்று சொல்லாத பேரில்லை மானக் கர்கள்

சுத்தமாக விடையெழுதித் தந்த போதும் பொல்லாத ஆசிரியர் பத்துக் கைந்து

புள்ளிகட்கு மேல்வழங்கத் துணிய மாட்டார் !

73,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/84&oldid=692018" இருந்து மீள்விக்கப்பட்டது