பக்கம்:கனியமுது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நல்லோர்,
      இயல்பான வரையறைக்குக் கட்டுப் பட்டுச்
செப்பனிட்ட பாதையிலே தடம்மா றாமல்
      சீராகச் செலுத்திடுவர் வாழ்க்கைத் தேரை!
எப்படியும் வாழ்ந்தாக வேண்டும்' என்னும்
      இழிகுணத்துக் கயவர்கள், இதய மின்றித்
தப்புமுறை கையாள்வர், மதிப்பு - மானம் -
      தரமெல்லாம் கருதமாட்டார்; தேவை, இன்பம்!

ஒருகுலையில் தோன்றுடமிரு காய்கள் போல
      உடன்பிறந்த இருவர் தாம் சுந்தர் - சேகர்.
பெருநிலையில் வாழ்ந்திட்ட தந்தை யாரோ
      பிறர்க்களித்தே வறியநிலை எய்திச் செத்தார்.
உருக்குலைந்த எளிமைதான் எனினும், மூத்தான்
      உளநிறைவாய் வெளியேறி நெறியில் நின்றான்.
திருக்குலைந்த ஏழ்மைநிலை வந்துங் கூடச்

      செருக்கோடும் மிடுக்கோடும் இளையோன் வாழ்ந்தான்.

81


6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/92&oldid=1380000" இலிருந்து மீள்விக்கப்பட்டது