பக்கம்:கனியமுது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

காவலர்கள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு
       கண்ணிமைக்கும் நேரத்தில் உள் நுழைந்தார்!
ஆவலுடன் விளக்கேற்றிப் பார்க்கும் போதில்
       அந்நகரின் பெருங்குடும்ப ஆண்கள் பெண்கள்
சேவலுடன் ஏதோவோர் பெட்டை போலச்
       சீர்குலைந்தும் உணர்விழந்தும் சேர்ந்தி ருந்தார்!
நாவலிமை உள்ளவர்கள் பறந்து போனார்—
       நாணயங்கள் மிகுந்தோர்க்கு வழியா இல்லை?

போலியாகப் பெருமனிதன் வேட மிட்டுப்
       பொல்லாத புன்செயலுக் கிடங்கொ டுத்து
வேலியாக மறைத்ததற்குக் கைவி லங்கும்
       வெளியேறாச் சிறைவாழ்வும் சேகர் பெற்றான்!
தாலிகட்டி மனைவியெனக் கொணர்ந்த தையல்
       தருணமென ஒருவனுடன் ஓடிப் போனாள் !
காலியான மாளிகையை ஏல மிட்டுக்

       கடன்காரர் பறித்திட்டார்! இதுதான் வாழ்வோ?

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/94&oldid=1380005" இலிருந்து மீள்விக்கப்பட்டது