பக்கம்:கனியமுது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடோடி போல் திரிந்த என்னி டத்தே
        நயமாக உரையாடி, அன்பு காட்டி,
ஓடோடி உதவிசெய்து, பாச மில்லா
        உள்ளத்தில் நல்லிரக்க உணர்வு பெய்து
காடோ, நல் கடற்புறமோ எங்குந் தங்கிக்
        காலத்தைக் கொன்றவனுக் கின்று சொந்த
வீடோ,என் றெண்ணுமாறு தனதில் லத்தை
        விளங்கவைத்த இராசாத்தி அன்புத் தங்கை.

நாரெல்லாம் பூவோடு சேர்வ தாலே
        நறுமணந்தான் பெறுவதுபோல் நானும் ஆனேன்.
ஊரெல்லாம் புகழ்பரப்பி, நாட கத்தில்
        ஒப்பற்ற நடி கரெனத் திறனும் பெற்றுப்
பாரெல்லாங் கொண்டாடும் பத்தி நாதன் -
        பாசமிக்க என்தங்கை இதயத் துள்ளே
போரெல்லாம் விளைத்திட்டார்! இறுதி வெற்றி

        புகழாளன் அவருக்கே! தங்கை தோற்றாள் !!

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/95&oldid=1380007" இலிருந்து மீள்விக்கப்பட்டது