உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடி மரபு

17

குல்பர்கா நகருக்கு ஓடி வந்தான். அவன் மகனே, ஹைதர் அலியின் பாட்டனான அலி முகமது.

மற்றொரு கூற்றின்படி, முதல் முன்னோன் முகமது பாய்லோல் என்பவன். இப்பெயர் மொகலாயருக்கு முன் தில்லியை ஆண்ட லோடி மரபினரின் பெயரை நினைவூட்டுவது. அவன் தன் புதல்வர்கள் வலி முகமது, அலி முகமது என்பவர்களுடன் பாஞ்சாலத்திலிருந்து பிழைப்புக்காக குல்பர்கா வந்து சேர்ந்தான். முந்திய மரபில் அலி முகமதுவின் தந்தையாகக் காணப்பட்ட வலி முகமது,. இம் மரபில் அவன் தமையனாகத் தோற்றமளிக்கிறான்.

ஹைதர் குடி மரபில், அலி முகமதுவுக்குப் பின் குளறுபடி எதுவும் இல்லை. ஆகவே அலி முகமதுவின் கால முதலே குடி மரபு வரலாறு மெய்யானது என்று கொள்ளலாம்.

அலி முகமது கல்வி, கேள்விகளில் வல்லவன். இப்புகழ் குல்பர்கா நகரில், அவன் மதிப்பை உயர்த்திற்று. அந்நகரில் வாழ்ந்த சயித் பர்ஸா முன்ஷி என்ற சமயத் துறைப் பெரியாரின் புதல்வியை, அவன் மணம் செய்து கொண்டான். குல்பர்காவில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல் காரணமாக, அவன் அந்நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. அவன் மைத்துனர்கள் ஏழு பேர் இருந்தார்கள். ஏழு பேருமே, பீஜப்பூர் சுல்தானிடம் படைத் துறை அலுவலில் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் ஆதரவால், அலி முகமதுவும் பீஜப்பூர் சென்று, பணியமர்வு பெற்றான். இனித் தன் வாழ்வு, பட்டு மெத்தை விரித்த வாழ்வாகவே இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு அமையவில்லை. அவுரங்கசீப் பீஜப்பூரைப் படையெடுத்த போது, அவன் மைத்துனர் ஏழு பேரும், ஒருவர் பின் ஒருவராக அரிய வீரச் செயல்களாற்றிக் களத்திலேயே புகழுடன் மாண்டனர். இச்செய்தி கேட்ட அவர்கள் தங்கையாகிய

2