பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-தம்பதி சமேதரான எங்களை மனப்பூர்வமாய் ஆசீர்வதி யுங்க!-நீங்க ரெண்டு பேரும் ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? -நான் இஷ்டப்பட்ட கல்யாணமாக்கும் இது!- ஆமாங்க: இது உண்மையான, சத்தியமான, தருமமான கலியான மாக்கும்!...ம் ஆசீர்வதியுங்க!' மணமகனும் மணமகளும் திருமண மாலைகளை மாற்றிக் கொண்டார்கள். கெட்டிமேளம் முழங்கியது. திருப்பூட்டி முடிந்தது.

  • நல்ல விளக்கு , அதீதமான ஒளியைச் சிந்திக் கொழுந்துவிட்டு எரிகிறது! -

ஆத்மநாதனும் சிவகாமியும் தங்களுக்குள்ளே அந்த ரங்கத்தைப் பேசி வைத்திருந்தவர்கள் மாதிரி, ஒரே நேரத் திலும் ஒரே பாவனையிலும் கைகளைத் துரக்கியெடுத்து உயர்த்திப் புதுமணத் தம்பதியை புதிய மனத் தம்பதியைப் பூரிப்புத் துலங்கிட ஆசீர்வாதம்;செய்கின்றனர்! அடுத்த விளுடியில் இரு ஜோடிக் கரங்களும் ஜோடி பிரியாமலே தொய்ந் தும் சாய்ந்தும் விழுந்துவிட்டன...! . சோதனை!...சோதனைதான். 'அம்...மா!' என்று கதறினாள் பார்வதி. அ.ப்பா' என்று அலறினாள் அவள். இஷ்ட தெய்வங்களின் காலடியைப் விட்டெழுந்து, ஐயையோ பாழாய்ப் போன தெய்வமே' என்று விம்மி வெடித்த வண்ணம் நடந்து, அந்தத் தெய்வ மணிக்கரங்களை எடுத்து கண்களிலே ஒற்றிக் கொண்டு, குமுறிக் குமுறி அழுதாள்: கதறிக் கதறிப் புலம்பினாள். மண்டையிலே அடித்துக் கொண்டு ஓலமிட்ட ராமையாவை கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டாள்; தம்பிப் வயலே நீ ஏண்டா அழறே? உனக்குத்தான் அக்கா நான்

1 31

131