பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கேனே? எனக்கும் கமலிக்கும் தானே அப்பாவும் இல்லே, அம்மாவும் இல்லாமல் போயிடுச்சு: என்று அவனைத் தேற்றிக்கொண்டே, தான் மட்டும் தேற. முடியாமல் ஒலம் பரப்பினாள் பார்வதி. அவளைப் பெற்ற தாய்க்கும் அவளை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கும் வந்த நெஞ்சுவலி அவர்களின் செல்வ மகளான அவளுக்கும் வந்து தொலைத்ததோ?-நெஞ்சைப் பற்றித் தேய்த்துக் கொண்டான். உயிர்ப் பகுதியில் விரல்களை வைத்துப் பைத்தியக்காரி மாதிரி வெறியுடன் அழுத்தியவள், மறு. இமைப்பில் மயங்கிக் சாய்ந்தாள். - "செந்தில், 'பாரு!' என்று வீரிட்டுக் கூப்பாடு போட் டான்; தன்னுடைய அருமையான உயிரை யாரோ சிறைப் பிடித்து அடைத்துவிட்ட உணர்வில் அவன் தவித்தான்; ஏங்கினான்!-மிஸ் பார்வதியை அழ வேண்டாம் என்றேன்: அழக்கூடாது என்றும் கெஞ்சினேன். 'அழாதீங்க, பாரு, அழாதீங்க! நீங்க இப்படி வாய் ஓயாமல் அழறதைக் காணக் காண எனக்கு நெஞ்சு பொறுக்கல்லேங்க, உங்க துயரத்தையும் துன்பத்தையும் என்னலே தாங்கிக்கிடவே, முடியல்விங்க, பாரு!...என் பேச்சைத் தட்டிப்பிட்டு நீங்க இப்படியே இன்னும் கொஞ்ச நாழி கூக்குரலிட்டால், அப்பாலே, உங்க அப்பா அம்மாவுக்கு வந்த நெஞ்சுவலி உங்களுக்கும் வராமல் தப்பாதுங்க! அப்படின்னு கெஞ்சிக் கூத்தாடினேனே?-என் பேச்சைக் கேட்காமலே, சாய்ந்து விட்டார்களே பார்வதி? விம்மிஞன் அவன்; ஒடியவன் சடுதியிலேயே நின்றான். பார்வதியை அப்படியே வாரி யெடுத்து மடியிலே போட்டுக் கொண்டு அவள் நெஞ்சிலே தடவிக் கொடுக்க வேண்டுமெனவும் துடிதுடித்தான் அவன் துடிப்போடு துடிப்பாக, அவனுடைய கடமை உணர்வு துடிதுடித்ததோடு சரி!- நான் பாவி ஆகிட்டேனே? நான் துர்ப்பாக்கியசாலியாக ஆகிட்டேனே நான்? -அவனும் நெஞ்சை பிசைந்து கொள்கிறான். ஒரு மாத்திரைப் பொழுது கழிந்ததும், அவன் பார்வதியை உடலும் உள்ள

is 2

132