பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும் அதிர்ந்து குலுங்க அண்டினான்; அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டுக் குந்தியவாறு, அவளுடைய பொற் பாதங்களை பொற்புமிக்க பாதங்களை நடுங்கும் விரல் களை நடுங்காமலே தொட்டான்: என் அப்பாவும் அம்மாவும் செத்தவங்க பிழைச்சிட்டாங்க; அதுமாதிரி' பார்வதியை பெற்றவங்களும் பிழைச்சிருக்கப் படாதா? - பாவம், பார்வதி!’ புதிதான தொட்டுணர்விலே, புதிதாகப் பிறந்தவள் போன்றே, பார்வதி புதிய பாவனையுடன் எழுந்தமர்ந் தாள். செந்திலை நேர்கொண்ட பார்வையால் அளந்தபடி, நீங்களா?' என்றாள். கண்களில் பணி பெய்கிறது: செந்தில் சின்னப் பையனாகச் செருமினான். பாரு!பாரு!... நீங்க மயங்கிச் சாய்ந்த நொடிப்பொழுதிலே, என் உயிரே போயிட்ட மாதிரி நான் தவிச்சுப் போயிட்டே ணுங்க, பாரு' என்றான். பார்வதிக்கு விம்மத்தான் தெரிந்தது! நடுக்காட்டில் கண்கட்டை அவிழ்த்துக் கொண்டவ ளுக முருகையனின் அரவணைப்பில் சோகமே உருவாக அமைதி பூத்துக் காணப்பட்டான் ராமையா; அக்கா பார்வதி எழுதிக் கொடுத்த அவசரத் தந்தியைக் கமலி அக்காவுக்கு அனுப்புவதற்கு அவசரமாக வெளியே ஓடி ஆனான்”

133

133