பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 , கன்னித் தொழுவம் 2. பூவை எஸ். ஆறுமு கம் காலத தேவனுக்கு இப்பொழுது கொள்ளிவாய்ப் பிசாசாக வேடம் கட்டிக் கொள்ள வேண்டுமென்ற வக்கிரப் புத்தி தோன்றியிருக்க வேண்டும். செந்தில் கெட்ட சொப்பனம் ஏதாகிலும் கண்டு. விட்டானோ? வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்: தடுமாற்றமும் தவிப்பும் தோன்றியது போலவே மறைய லாயின. நிதானம் அடைந்தான்; மணிக்கட்டில் காலத் தேவனை சந்தித்தவன், எதிர்ப்புறத்தில் தெருவாசலில் பார்வையைச் செலுத்தினான். பெருமையாகவும் பெரு, மிதத்தோடும் ஓர் அரைக்கணம் அவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்; காரியசித்தியின் வெற்றிக்களிப்பு அந்தச் சிரிப்பிலே கடமை தவறாமல் கொடிகட்டிப் பறந்தது. தன்னுணர்வு அடைந்ததுதான் தாமதம்; அவன் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்கின!- ஆமாங்க: இது உண்மையான-சத்தியமான-தருமமான கலியான மாக்கும்;'-ஒ. மிஸ் பார்வதி சொன்னர்கள்! காடவிளக்கின் தலைமாட்டில் ஆத்மநாதன்-சிவகாமி தம்பதியர் இன்னமும்கூட தம்பதி சமேதராகவே கண் வளர்ந்து கொண்டிருக்கிறார்களே? ചേക്കേ சிட்டுக் குருவி. கீழே வெள்ளைப்பூனை.

1 34

134