பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டது. சலனம் மனத்தோடு சரி: பூவிரல்கள் சுறுசுறுப்பு அடைந்தன. உள்ளே: கனகசபை மகாராஜாவின் தர்பார் நடந்து கொண் டிருந்தது. பூவானத்தின் ஒளிச்சிதறல்களாக, சிரிப்பின் அவை: கள் மின் வெட்டின. இந்த ராஜ்யத்தில் அன்பிற்குப் பஞ்சமே இருப்பதில்லைதான். எனவேதான், அங்கே காப்பியின் சுகந்தம் சுகமாகவே மணக்கவும் செய்தது. கண்மணிப் பதிப்பகத்தின் புகழில், உரிமையாளர் கண்க சபையின் செல்வாக்கு ஆட்சி செய்ததிலும் வியப்பில்லை தான், அவர் நாலுபேருக்கும் நல்லவர்; நாலு பேருக்கு நடுவில் உழைத்தவர்; நாலு பேர் போற்றிட உழைத்தவர். நல்ல குணம் கெட்டு விடக்கூடாதென்று நினைத்தோ என்னவோ. அவர் இன்னமும் நாற்பது வயதைத் தாண் டாமலே இருந்தார். காலடி அரவம். அரவம்- சத்தம், - பார் வதிக்கும் பயத்திற்கும் வெகுத் தொலைவு, காத ளவோடிய கண்களை உயர்த்தினாள்: இதழ்க்கடையில் பூஞ்சிரிப்பின் கடைவிரிப்பு. - "நான் போயிட்டு வர்றேன். பார்வதி; என்னை மறந்திட மாட்டீங்களே?' பார்வதி: மேல் வரிசையில் முன்பற்கள் இரண்டும் முத்தொளி சிந்துகின்றன. திரைப்படத் துறை நபர் உள்ளே சென்ருர், யூசுப் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டு நகர்ந்தான். பார்வதி சுவரைப் பார்த்தாள். மணி பத்தரை. - கடிகாரம் எப்போது பத்து அடித்தது? வணக்கம், தம்பி!’

29

29