பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டனவே? சிநேகிதி. தாரா என்ன ஆனாள்? தோழர் செத் தில் என்ன ஆனார்? - அவர்களது காதல் கதை என்ன ஆயிற்று? ஒரு கதையும் தெரியவில்லை! தெரு நாய்க்கு வேலை இல்லை. பிச்சைக்காரிக்கு இராப்பிச்சை' கிடைத்தது. பிச்சைக்காரப் பெரியவருக்கு இந்நேரம் நிழல் கிடைத் திருக்கும்! பார்வதியின் தர்மம் அவள் தலையைக் காக்க வேண் டியதுதான் பாக்கி, . அப்பா ஆத்மநாதனை இன்னும் காணவில்லை. மயி லாப்பூர்வரை போயிருக்கிறார், சொல்லிவிட்டுதான் புறப் பட்டாரீ. வரன் விஷயம்! வரதட்சண்ை வாங்காத அபூர்வ மான மாப்பிள்ளையாம்! என்னவோ பெயர் சொன்னாரே அப்பா?- ஒ. நாராயணண்! நடுத்தரவர்ககத்திற்கு லாயக் கான பேர்தான்! எதையோ நினைத்தவள், ஏனோ தன் னுள்ளே சிரித்துக் கொண்டாள். வரந்தாவுக்கு வந்து தாழ்ப்பாளைச் சரிபார்த்துவிட்டுக் கூடத்துக்குத் திரும்பிய வள். திரும்பவும் தன்னுடைய அறைக்குச் சென்று ட்ரங்கு பெட்டியைத் திறந்து, அந்த காதல் கடிதங்களின் கனமான உறையைக் கனமான தெஞ்சோடு சுமந்து வந்து குறிச்சியில் அமர்ந்தாள். கொசுப்பண்ணை மின் காற்றின் சுகத்தை அனுபவித் ததோடு திருப்தி அடையாமல் அம்மா பேரிலும் படை யெடுத்துத் தொலைக்கவே, பார்வதி ஆத்திரம் அடைத் தாள். பேப்பரை எடுத்துக் கொசுக்களை விரட்டி விட்டாள். அம்மா புரண்டு படுக்கிறாள். டாக்டர் சுசீலா அம்மாள் சிபாரிசு செய்த 'இப்ரால்" ஆானில் நன்றாகவே வேலை செய்கிறது. இல்லையென்றால் தம்மா எங்கே அசந்து தூக்கப் போகிறாள்? பூப்பாரம்

4 4.

44