பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமநத புண்ணியவதி, குடும்பப் பாரத்தைச் சுமக்க மாட் டாமல் எத்தனை தூரம் அவதிப்படுகின்றாள்?-பார்வதி தன்னுடைய கலியாணத்தில் ப்ோய் நின்றாள். தலையைச் சுற்றியது; எழுந்து விட்டாள். இப்போது அவள் பார்வை யில் பிளாஸ்டிக் உறை தட்டுப்பட்டது. பிரகடனம் செய் யப்பட்ட காதலின் கடிதங்கள் அல்லவா அவை? காதலாம் காதல்; . கள்ளமார்க்கெட் இல்லாமல் காதல் கூட விலை போகாதே! என்ன விலையாம் கிலோ? தம்பிப்பயல் வந்து விட்டான். அட்டே, அப்பாவும் திரும்பி விட்டார். சரிபாதி மன உளைச்சல் மிச்சம். பார்வதிக்கு இப்போதுதான் பசி தெரிந்தது; பசி எடுத்தது. பாத்திரங்கள் சத்தம் போட்டன. ராமையா மட்டும் சத்தம் போடவில்லை: சாப்பிட் டான், - ர்ாமையாவிற்கான பாயை உதறி. போட்டாள். அவள் அதிலேதான் எத்தனை எத்தனை பொத்தல்கள்!-ஆயிரம் கண் உடைய ஆயிமகமாயிக்குத்தான் வெளிச்சம்! - முதல் தேதி சம்பளம் வாங்கின கையோடு, புதுப்பாய் ஒன்று வாங்கிட வேண்டும். கோடை முடிவதற்குள்ளாக வாங்கி விட்டால் சரி. சின்னஞ்சிறு தலையணையையும் எடுத்துப் போட்டாள். தம்பிக்கு ஒரு பழக்கம் உண்டு, ராத்திரியில் சாப்பிட்டுக் கையை கழுவினானோ இல்லையோ, துக்கம் ஒ.ே டாடி வந்து விடும்! அப்பா முகம் கை கால் கழுவிக் கொண்டு, பூஜைக் கூடத்துக்குப் போய்த் திரும்பி அம்மாவின் தலை மாட்டில் வந்து குந்தினார். கொண்டவளைக் கண்கள் கொண்ட மட்டும் பாதாதி கேசம்வரை ஒரு முறை பார்வையிட ாைனார்; ஆற்றாமையால் பெருமூச்சுச் சீறுகி றது. சின்

45

45