பக்கம்:கன்னித் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கலைஞனும்

பிரமதேவன் படைப்புத் தொழிலைத் தொடங்கி ன்ை. அழகான பெண்களைப் படைத்தான். அவர் களுள் கலைமகளைப் படைத்தவுடன் அவளுடைய பேரழகிலே சொக்கிப் போனன். ‘நீ என் மனைவியாக இரு’ என்று வேண்டினன். அன்று முதல் கலைமகள் பிரமதேவனுடைய மனைவியாகி விட்டாள்.

இந்தப் புராணக் கதையை நீங்கள் கேட்டிருக் கிறீர்களா? நம்முடைய நண்பர்கள் சிலருக்கு இந்தக் கதையைக் கேட்கவே பிடிப்பதில்லை. என்ன பைத் தியக்காரத்தனம்! பிரமா கலைமகளை உற்பத்தி செய்தார்; ஆகவே அவர்அவளுக்குத்தந்தைமுறைஆகவேண்டும். தந்தை தம் சொந்த மகளை மணந்து கொள்வது நியா யமா? அதை நாகரிகம் மிக்க ஒரு நாட்டினர் ஒப்புக் கொள்ளலாமா?’ என்று ஏசத் தொடங்குகிறார்கள்.

இது புராணக் கதை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதாவது உண்மையில் நிகழ்ந்த வரலாறு அன்று. ஏதோ கருத்தைப் புதைத்து வைத் திருக்கும் கற்பனை அது என்பதை நாம் உணர வேண் டும். இல்லையானுல் கலைமகள் பிரமதேவன் நாவில் உறைகிருள் என்பதை அப்படியே நம்பலாமா? நான் முகன் வாய்க்குள் கலைமகள் பெண் உருவோடு வாழ

முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/122&oldid=612720" இலிருந்து மீள்விக்கப்பட்டது