பக்கம்:கன்னித் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயும் கலைஞனும் í 15

பிரமதேவன் கலைஞர்களிலே பெரிய கலைஞன்; ‘மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் இலகிய அழகை இயற்றிய ஈசன் அவன். தொழிலாளி ஒருமுறை செய்ததையே திருப்பிச் செய்து கொண் டிருப்பான். கலைஞனே ஒவ்வொரு கணமும் தன் படைப்பில் புதுமையைக் காட்டுவான். பிரமன் படைத்த மனிதர்கள் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் படைப்பிலேதான் எத்தனை புதுமை ஒருவன் முகம்போல மற்றாெருவ னுக்கு முகம் இல்லையே! அத்தனை திறம்படக் கலைப் பொருளைப் படைக்கும் பிரமதேவனைக் கலைஞர் சிகாமணி என்று தானே சொல்லவேண்டும்?

கலைஞன் படைப்பே தனி வகை. கலைஞன் படைக் கும்போது மற்றவர்களைவிட வேருன நிலையில் இருப் பவன். ஆல்ை அந்தப் படைப்பை நுகரும்போது அவனே முதலில் நிற்பான். அருமையான இசைக் கச்சேரி நிகழ்கிறது. இசைக் கலையில் மகா மேதாவி யான ஒருவர் பாடுகிறார். அவர் பாட்டு மிக மிக உயர்ந்து விளங்குகிறது. இதைச் சபையில் உள்ளவர்கள் சொல்லவேண்டும் என்பது இல்லை. அந்த இசைக் கலைஞர் உள்ளத்துக்கே தெரியும். தாமே அநுபவித்துப் பாடினுல்தான் மற்றவரையும் அநுபவிக்கக் செய்ய முடியும். ஆதலின் அவருடைய சங்கீதத்தை முதலில் அநுபவித்தவர் அவரே என்று தா ன் சொல்ல வேண்டும்.

ஒரு சிற்பி அற்புதமான விக்கிரகம் ஒன்றைச் செதுக்குகிருன். எங்கிருந்தோ கல்லைக் கொண்டு வந்து போட்டு உளியால் அதனை உருவாக்க முயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/123&oldid=612723" இலிருந்து மீள்விக்கப்பட்டது