பக்கம்:கன்னித் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கன்னித் தமிழ்


கிருன். அதன்மேல் கால் வைத்துக் கொத்துகிருன். உட்கார்ந்து பொளிகிருன் வெறுங் கல்லாக இருந்தது மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. சிற்பி தன் உள்ளத்திலே செதுக்கிக்கொண்ட திருஉருவத்தைக் கல்லிலே செதுக்கிவருகிருன். முதலில் கரடு முரடான உருவம் அமைகிறது. பிறகு ஒவ்வோர் அங்கமாக நகாசு செய்யத் தொடங்குகிருன். நாளாக ஆக அது கல்லின் நிலைமையிலிருந்து மாறிக் கடவுளின் நிலைமை யை அடைகிறது. எல்லாம் நிறைவு பெற்ற பின் கண திறந்துவிடுகிருன். அது வரையில் அது கல்லாகிச் சிலையாகி உருவமாகி இப்போது கடவுளாகி விட்டது. சிற்பியின் குடிசையிலிருந்து கோயிலுக்குப் போகிறது. அதற்குப் பின்னல் அது தெய்வமாகி விடுகிறது. அதை முதலிலே கும்பிடுகிறவன் அந்தச் சிற்பிதான். தன் கால்பட்ட கல் என்றா அதை அவன் நினைக்கிருன்? இல்லை; ജൂൺ8. அது கடவுள் என்றே கும்பிடுகிருன். கோயிலுக்குப் போய்ப் பிரதிஷ்டை ஆன பிறகு தன் பெண்டு பிள்ளைகளுடன் போய் அர்ச்சனை செய்கிருன். அவன் படைத்த பொருளானலும் அதல்ை வரும் பயனை அநுபவிப்பதில் அவனே முந்தி நிற்கிருன்

பிரமதேவனுகிய கலைஞன் ஒர் அழகுப் பிழம்பைப் படைத்தான். அதன் இன்பத்தை நுகர்ந்தான். சங்கீத வித்துவான் தன் சங்கீதத்தைத் தானே அநுப விப்பதுபோலவும், சிற்பி தான் படைத்த உருவத்தைத் தானே வணங்குவது போலவும் நுகர்ந்தான். வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கலாம். சங்கீதம் மற்றவர் களுக்கு இன்பம் தருவதற்குக் காரணம், சங்கீத வித்து வானுக்கே அது இன்பம் தந்ததுதான். விக்கிரகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/124&oldid=1286018" இலிருந்து மீள்விக்கப்பட்டது