பக்கம்:கன்னித் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயும் கலைஞனும் 117

மற்றவர்களால் வணங்கப் பெறுவது, அதைப் படைத்த சிற்பியே முதலில் வணங்கினதால்தான். பிரமதேவன் தான் படைத்த கலைப் பிழம்பைத் தானே மதித்துச் சிறந்த இடத்தில் வைத்துப் பயன் கொண்டான்; உலகம் பிறகே பயன் கொள்ளுகிறது. கலைமகள் பிரமாவின் மனைவி, ஒரு பெண், ஒர் ஆடவனுக்கு மனைவி’ என்று சொல்லுகிற வகையில், அவர்களி டையே உள்ள உறவு உடம்பைக்கொண்டு அளப்பது அன்று. அங்கே உடம்பே இல்லை. நான்முகன் என்ற ஒருவன் உடம்பு படைத்து உப்புக்கும் அரிசிக்கும் கேடாக வாழவில்லை; அவன் ஒரு தத்து வம்; கலைஞன் பண்பைக் குறிக்கும் தத்துவம். அப் படியே கலைமகளும் அங்கம் படைத்த பெண் அல்ல; இன்று பிறந்து நாளைக்குப் பக்குவமாகி அதற்கு அடுத்த நாள் கிழவியாகி மறுநாள் செத்துப்போகும் மனித உடல் படைத்தவள் அல்ல. நித்திய யெளவனம் உடையவளாய், நித்திய சுந்தரியாகித் தன்னை அடைந்தார் யாவருக்கும் உடலுக்கு அப்பாற் பட்ட தூய இன்பத்தை உதவுபவளாய் இருப்பவள். அவள் பலருக்கு இன்பத்தைத் தருபவள். ஆனல் கன்னி. அவள் பலருடைய நாவில் இருப்பவள். ஆளுல் சிறிதும் குறைவுபடாதவள். எதைப் படைத் தாலும் அவள் அருள் வேண்டும். கலைத்திறமை இல்லாத படைப்பில் புதுமை இல்லை; இன்பம் இல்லை. கலைமகள் என்னும் கற்பனை இத்தனை தத்துவத்தையும்: உள்ளடக்கிக் கொண்டு நிற்கிறது. -

கலைத்திறமையைத் தெய்விகப் பண்பாய்ப் போற்று `வது இந்த நாட்டு வழக்கம். கலைஞர்களைத் தெய்வத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/125&oldid=612729" இலிருந்து மீள்விக்கப்பட்டது