பக்கம்:கன்னித் தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

கன்னித் தமிழ்


மனிதர்களோடு சேரத் தகுதியுடையோம்’ என்ற நம் பிக்கை உதயமாகும்.

இத்தகைய உள்ளப் பயிற்சியையே கல்வி முறை யாக முன்னேர் போற்றினர்கள். இதை மாளுக்கர் களுக்குக் கற்பித்துத் தரும் ஆசிரியர் நடுங்கும் உள்ளத்தோடு இருக்கலாமா? அசையாத உறுதியும் நிலையான இயல்பும் அவர் உள்ளத்தில் நிலவ வேண்டும் அல்லவா? ஆதலால் ஆசிரியர் அசலத் தைப் போலத் துளக்கலாகா நிலையை உடையவ ராவதும் அவசியம். . ஆசிரியர் பிறருடைய கவனத்தை ஈர்க்கும் தோற். றம் படைத்தவராக இருக்க வேண்டும். தோற்றம் என்பது உடலின் தோற்றம் அன்று; அவருடைய இயல்பு, வார்த்தைகள் எல்லாம் சேர்ந்த ஓர் உருவம் (Personality). அகத்திய முனிவர் உருவத்தால் சிறியவர்; ஆலுைம் அவருடைய தோற்றம் பெரிது. எவ்வளவு மக்கள் கூடியிருந்தாலும் அவரைத் தனியே கண்டுபிடித்து விடலாம். உருவச் சிறுமையாலன்று. அந்தப் பெரிய கூட்டத்தில் அவரைச் சூழ மக்கள் பணிவோடு நிற்பார்கள். எல்லோருடைய கண்ணும் கருத்தும் அவரிடமே செல்லும்.

ஆசிரியரிடம் . இத்தகைய தோற்றம் இருக்க வேண்டும். வேகமாகக் காற்று அடிக்கிறது. மேகங் கள் கலைந்து ஒடுகின்றன. உன்னதமான மலை ஒன்று இருந்தால் மேகங்கள் தடைப்பட்டு நின்று விடுகின் றன. மலையின் தோற்றம் எல்லாப் பொருள்களையும் தன்னிடத்தில் நிற்கும்படி செய்கிறது. வெகு வேக மாக ஒரு காரியத்தைச் செய்ய ஒரு மனிதன் ஓடுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/140&oldid=1286026" இலிருந்து மீள்விக்கப்பட்டது