பக்கம்:கன்னித் தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 133

இடையே வாத்தியார் ஐயாவைச் சந்திக்க நேர்ந்தால் அவன் வேகம் குறைந்து சட்டென்று நின்று ஒரு கும்பிடு போடுகிருன். அவர் பேச ஆரம்பித்தால் பொறுமையோடு கேட்கிருன். சில சமயங்களில் அவருடைய நல்லுரைகளில் ஈடுபட்டுத் தன் வேலை யையே மறந்து போனுலும் போய்விடுவான். இப்படி ஒரு தோற்றம் ஆசிரியருக்கு இருக்க வேண்டுமென்றால் அவரை ஊராரெல்லாம் பாராட்டித் தொழுவதில்

ஆச்சரியம் என்ன?

பஞ்சம் வந்து விட்டது; அப்போது மற்ற இடங் களிலெல்லாம் விளைவு குறைந்து விடும். மலையுள்ள இடங்களில் பஞ்சத்தின் கொடுமை உடனே தாக்காது. மரங்களும் அருவிகளும் நிரம்பிய மலை பஞ்ச காலத்தில் மக்களுக்கு ஒரு சேம நிதிபோலப் பயன்படும். ஆசிரி யர் வறப்பினும் வளந்தரும் வண்மை உடையவராக இருக்க வேண்டுமென்று இலக்கணம் சொல்லுகிறது. பொருட் பஞ்சம் ஏற்பட்டாலும் அறிவுப் பஞ்சம் வராமல் பாதுகாப்பது அவர் கடமை. இவ்வளவு இயல்புகளையும் சேர்த்து இலக்கணம் ஒரு சூத்திரத் தில் சொல்கிறது.

அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்

வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலேக்கே.

(துளக்கல் - அசைத்தல். வறப்பினும் - பஞ்சம் வக் தாலும்.)

கலைபயின்ற தெளிவுடைய ஆசிரியர் துலாக் கோலைப்போல ஐயமின்றிப் பொருளின் மதிப்பைத் தெரிவிக்க வேண்டும். ஒரு பண்டத்தை நிறுக்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/141&oldid=612786" இலிருந்து மீள்விக்கப்பட்டது