பக்கம்:கன்னித் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

கன்னித் தமிழ்


தராசு முள நடுநிலையில் நின்றால்தான் பொருளின் உண்மைக் கனம் தெளிவாகும். ஒரு பொருளையும் நிறுக்காமல் தராசை முதலில் துக்கிப் பார்த்து, முள் நடுநிலையில் நிற்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகே நிறுப்பது வழக்கம். முள் ஒரு பக்கமாகச் சாய்ந்தால் நியாயமான வியாபாரி அதைக் கையால் கூடத் தொடமாட்டான். ஆசிரியர் நூற்பொருளை நிறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். தம்முடைய விருப்பு வெறுப்பினுல் நூலில் உள்ள கருத்தைக் கூட்டியோ குறைத்தோ சொல்லக் கூடாது. சாதி, சமயம், கொள்கைகளால் வேறுபட்ட புலவர் ஒருவர் இயற்றிய நூல் ஒன்றைப் பாடம் சொல்லும்போது, தம் கொள்கைக்கு மாறுபட்டது என்ற காரணத்தால் அதைக் குறைத்துக் கூறக்கூடாது. நூல்களைத் தாம் ஆராய்ந்தாலும், கற்பித்தாலும் நடுநிலையில் நின்று, நூற்பொருளில் தம் கருத்தை நுழைக்காமல் இருப்ப வரே சிறந்த ஆசிரியர்.

ஐயம் திரப் பொருளே உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகும் நிறை கோற்கே

என்று இலக்கணம் கூறுகிறது.

சமூகமாகிய மரத்தில் வாத்தியார் ஐயா மலரைப் போல விளங்குகிறார். மலர் அழகிய பொருள்; மங்கலமான பொருள். வ்ாத்தியார் ஐயா இருந்து விட்டால் சமுதாயம் சோபையை அடைகிறது. சமுதா யத்துக்கு இன்றியமையாத பொருள் அவர். ஊரில் எந் தப் பொதுக் காரியமானலும் வாத்தியார் ஐயாவுக்கு முதல் அழைப்பு. யாராக இருந்தாலும் அவரை வர வேற்று உபசரிப்பார்கள். அவர்யாவருக்கும் இனியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/142&oldid=1286027" இலிருந்து மீள்விக்கப்பட்டது