பக்கம்:கன்னித் தமிழ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

கன்னித் தமிழ்


யாமல் பத்துச் செண்டு நிலம் மூவாயிரம் நாலாயிரம் என்று விலை போகிறது. சென்னையில்; அந்த நிலங் கள் உயர்ந்தவைகளா? பணத்தைக் கொண்டு அளந் தால் அவைகளே சிறந்த நிலங்கள். அந்த நிலங்களை வளமுடைய நிலங்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது. பணமுடைய நிலங்கள் என்று வேண்டு மால்ை சொல்லலாம். நிலத்தின் பெருமையை அளக்க, அது என்ன விலைக்குப் போகும் என்ற ஆராய்ச்சி பயன்படாது. அதில் என்ன விளையும் என்று ஆராய வேண்டும். விலை நிலத்தைக் காட் டிலும் விளை நிலத்துக்குத்தான் எக் காலத்திலும் மதிப்பு உண்டு.

2

தமிழ் நாட்டில் நிலத்தின் மதிப்பை அதன் விளைச் சலைக் கொண்டே அளந்தார்கள். நில வளப்பத்தை எடுத்துச் சொல்லும்போது, இத்தனை ரூபாய் விலைக் குப் போகும் என்ற சிந்தனையே அவர்களுக்கு இல்லை. நிலத்தின் பெருமையை எப்படி அளந்து சொன்னர்கள் பழந் தமிழர்கள் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

கரிகால் சோழனைப்பற்றி மிக விரிவாக முடத் தறமக்ட்கண்ணியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். பொருநராற்றுப்படை என்பது அந்தப் பாட்டின் பெயர். காவிரி சோழ நாட்டை வளப்படுத்திப் பாது காக்கிறது. சோழ நாட்டில் உள்ள நிலவளத்தை அழகாக வருணிக்கிறார் புலவர். கடைசியில் பாட்டை

முடிக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/170&oldid=1286039" இலிருந்து மீள்விக்கப்பட்டது