பக்கம்:கன்னித் தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி அளப்பது? Í 63

    • 物心* **萨萄珍曼*曾*甲*****“ வேலி

ஆயிரம் வின்யுட் டாகக்

காவிரி புரக்கும் நாடுழெ வோனே என்று புலவர் பாடுகிறார். ‘ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையும்படியாகக் காவிரி பாது காக்கும் சோழநாட்டுக்கு உரியவனே’ என்பது இதன் பொருள். வேலி என்பது நிலப்பரப்பின் அளவு. நிலத் தின் பரப்பைக் கொண்டா அதற்குப் பெருமை ஏற் படுகிறது? இல்லை. அதனுல் உண்டாகும் பயனைக் கொண்டுதான் அதற்குப் பெருமை. அதைத்தான் புலவர் சொல்கிறார். ‘வேலிக்கு ஆயிரம் கல நெல் விளையும் எங்கள் சோழநாட்டுப் பூமியில்!” என்று சொல்வதில் சிறப்பிருக்கிறதா? ‘ஏகரா பதினையாயிரம் ரூபாய் விலைக்குப் போகும்” என்று சொல்வதில் சிறப் பிருக்கிறதா? முன்னது விளைநிலத்தின் பெருமையை உணர்ந்த வேளாண் செல்வர் பேசுவது; பின்னது விலைநிலத்தின் விற்பனையை நினைத்து வியாபார (3 நாக்கமுடையவர் சொல்வது.

3

மற்றாெரு புலவர் சோழநாட்டு நிலத்தை அளக் கிறார். ஆவூர் மூலங்கிழார் என்ற பெயருடையவர் அவர். கிள்ளி வளவன் என்ற சோழ மன்னனைப் பாடு கிறார். அப்போது சோழநாட்டின் நிலவளத்தை அளந்து சொல்கிறார். அவர் அளக்கிற முறை அழகாக இருக்கிறது. o

மனிதன் அரிசிச் சோறு சாப்பிடுகிருன். அந்தக் காலத்தில் சாமானிய மனிதன் ஒரு நாளைக்குச் சின் னப் படியில் ஒரு படி அரிசிச் சோறு சாப்பிடுவானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/171&oldid=612887" இலிருந்து மீள்விக்கப்பட்டது