பக்கம்:கன்னித் தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

கன்னித் தமிழ்


‘உண்பது நாழி’ என்று ஒளவைப்பாட்டி பாடி யிருக்கிருள். மனிதன் உண்ணும் அளவையே அளவாக நிலத்தை அளப்பது ஒரு முறை. இப் போதுகூட நாம் சிலரைப்பற்றிப் பேசும்போது, “அவனுக்கு ஆறுமாதச் சாப்பாட்டிற்கு இருக்கிறது”

என்றுசொல்வது உண்டல்லவா?அதைப்போலஆவூர் மூலங்கிழார் சொல்ல வருகிறார். அவர் மனிதனுடைய வயிற்றை அளவாகக் கொள்ளவில்லை. பெரிய அளவு கருவியைக் கொண்டு அளக்கிறார். மனிதன் நாழி அரிசி உண்டால் யானை எவ்வளவு உண்ணும்? ‘யானை யைக் கட்டித் தீனி போடுவதா?’ என்று பழமொழியே இருக்கிறதே! யானைக்குத் தீனிபோட்டுக் கட்டாது. அந்த யானையின் உணவையே தம் அளவு கருவியாகக் கொள்கிறார் புலவர். -

பெண்யானை ஒன்று அயர்ச்சியினுல் படுத்துக் கொண்டிருக்கிறது. அது எத்தனை பரப்புடையதாக இருக்கும்? அந்தப் பரப்பையுடைய நிலத்தில் சோழ நாட்டில் உண்டாகும் விளைச்சலுக்குக் கணக்குச் சொல்கிறார்.

ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு. ஒரு பெண்யானை படுத்துக் கொள்ளும் சிறிய இடத்தைக்கொண்டு ஏழு ஆண்யானைகளைப் பாது காக்கலாமாம். அவ்வளவு சின்ன இடத்திலே விளையும் நெல்லைக்கொண்டு ஏழு களிறுகளை எப்போதும் கவ ளம் இட்டுக் காப்பாற்றலாம். நிலப்பப்பையும் யானை யைக் கொண்டு அளவிட்டார்; நிலத்தின் விளைச்சலை யும், அதைக்கொண்டே அளவிட்டு விட்டார், ஏழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/172&oldid=1286040" இலிருந்து மீள்விக்கப்பட்டது