பக்கம்:கன்னித் தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி அளப்பது ? 165

யானைக்குத் தீனிபோடும் நிலம் என்று. சாதாரணமா கச் சொன்னுல் ஏகராக் கணக்கில் இருக்குமென்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனுல் சோழநாட்டு நிலம் உயர்தரமானதாயிற்றே; ஒரு யானை படுக்கும் இடத் தில் ஏழு யானையை வளர்க்கும் விளைச்சல் விளைகிறது. புலவர் நிலத்தை அளப்பது எப்படி இருக்கிறது?

4. மற்றாெரு புலவர் சோழநாட்டு நிலவளத்தைப் பொதுப்படையாகச் சொல்கிறார். மற்ற நாட்டின் நில வளப்பத்தோடு ஒப்பிட்டுச் சொல்கிறார், -

சோழநாடு காவிரியில்ை வளத்தைப் பெறுகிறது. ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பிற நாடுகளில் ஏரிகள் உள்ளன. கொங்குநாடு போன்ற இடங்களில் கிணறு கள் தோண்டி ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சுகிறார்கள். ஆற்றுக்கால் பாய்ச்சல், ஏரிப் பாய்ச்சல், இறைவைப் பாய்ச்சல் என்ற இந்த மூன்று வகையில் ஆற்றுக்கால் பாய்ச்சலே சிறந்தது. அதுவும் காவிரியாற்றுப் பாய்ச் சல் மிக மிகச் சிறந்தது. -

ஏரியினல் விளையும் நாட்டினரும், ஏற்றத்தால் விளையும் நாட்டினரும் தங்கள் நாடுகளில் விளையும் நெல்லைக் கணக்கெடுக்கிறார்கள். எல்லாக் கணக்கையும் கூட்டிப் பார்க்கிறார்கள். அந்தக் கணக்கு அவர்களுக்குப் பிரமாதமாக இருக்கும். சோழநாட்டுக்காரன்-அந்தக் கணக்கைப் பார்க்கிருன் என்று வைத்துக்கொள் வோம். மகா பிரமாதம்’ என்று சப்புத்தொட்டுவான். அவனுடைய நாட்டிலே விளையும் நெல் எங்கே? இந்த

விளைவு எங்கே?'அஜகஜாந்தரமாகவல்லவா இருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/173&oldid=612893" இலிருந்து மீள்விக்கப்பட்டது