பக்கம்:கன்னித் தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

கன்னித் தமிழ்


புலவர் கரிகாலனுக்குச் சொந்தமான சோழ நாட்டை, காவிரி சூழ்நாட்டைப் பாராட்டுகிறார். ‘மற்ற நாடுகளில் நீர்ப்பாசனம் ஏரியினுலும் ஏற்றத்தாலும் நடைபெறுகிறது. அதல்ை நெல் விளைகிறது. அப்படி உண்டாகும் நெல்லை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், எங்கள் சோழநாட்டில் அறுவடைக் காலத் தில் அரியும்போது கீழே உதிர்கிறதே அந்த நெல் லுக்கு ஒருகால் சமானமாக இருக்கலாம்” என்று சொல் கிறார், அரிகாலின் கீழே சிதறும் நெல்லைச் சோழ நாட்டில் நிலத்துக்கு உடையவர்கள் பொறுக்கமாட்டார் கள். அறுவடையான பிறகு, கீழே சிந்திய நெல்லை ஏழைகள் பொறுக்கிக்கொள்வார்கள். அவர்களாலும் பொறுக்க முடியாமல் கிடக்கும் நெல்ல வாத்துக்கள் கொத்தித் தின்னும், அப்படி அரிகாலின் கீழே உக்க நெல்லைத் தொகுத்துப் பார்த்துக் கணக்கெடுத்தால், ஏரியினுலும் ஏற்றத்தினுலும் விளையும் பிற நாட்டு நெல்விளைச்சல் அத்தனைக்கும் சமானமாக இருக்கு மாம். புலவர் சோழநாட்டு நிலத்தின் தரத்தை அளக் கும் முறை இது. -

ஏரியும் ஏற்றத்தி னனும் பிறநாட்டு வாரி சுரக்கும் வளன் எல்லாம்-தேரின் அரிகாலின் கீழ்உகூஉம் அந்தெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு. - - இப்படி அளந்து பெருமைப்பட்டால் உண்மை யான விளை நிலத்தின் மதிப்பை உணரலாம். ரூபாயைக் கொண்டு அளந்தா நிலத்தை மதிப்பிடுவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/174&oldid=1286041" இலிருந்து மீள்விக்கப்பட்டது